புதுக்கோட்டையில் SDPI கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக ஒற்றை கோரிக்கை மாநாடு!
புதுக்கோட்டையில்  SDPI கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக ஒற்றை கோரிக்கை மாநாடு! இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திடுக SDPI கட்சி மாநில தலைவர் பங்கேற்பு.

25 ஆண்டுகளாக சிறையில் வாழும் அப்பாவி இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, புதுக்கோட்டை திலகர் திடலில் SDPI கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக, ஒற்றை கோரிக்கை மாநாடு மேற்கு மாவட்ட தலைவர் H.ஸலாஹுதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார்.

"37 ஆயுள் முஸ்லிம் சிறைவாசிகள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது,  தமிழக முதல்வர் உடனடியாக அப்பாவி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்திட ஆணையிட வேண்டும், இல்லையெனில் இன்னும் வீரியமாக SDPI கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டு உரையாற்றினார்.மேலும் இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் R.ஹஸ்ஸான் பைஜி, விமன் இந்தியா மூவ்மென்டின் மாநில தலைவர் K.பாத்திமா கனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஜகுபர் அலி உள்ளிட்ட மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொட்டும் மழையிலும் திரளாக கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments