தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு 2173 கிலோமீட்டர் தூரத்தை 7 மாநிலங்களை கடந்து வெறும் 28 மணி நேரத்தில் சென்றடையும் 3 ரயில்கள்
ரஜ்தானி எக்ஸ்பிரஸ்
MGR சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் (Bi -Weekly)
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவின் தலைநகர் புது தில்லியை பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்கள் அல்லது பெரிய நகரங்களுடன் இணைக்கும் இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் இந்திய பயணிகள் ரயில் சேவைகளின் தொடர் ஆகும் . ராஜ்தானி என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டது , அதாவது ஆங்கிலத்தில் மூலதனம். இந்த தொடர் தொடர்வண்டிகள் இந்திய இரயில்வேயில் தொடர்ந்து அதிக முன்னுரிமை பெறுகிறது மற்றும் அதன் மிக பிரீமியம் ரயிலாக கருதப்படுகிறது.
வண்டி எண் 12433
சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன்
சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு வெள்ளி கிழமைகளில் காலையில் 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் சனி ,திங்கள் கிழமைகளில் காலை 10.30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.
வண்டி எண் 12434
ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல்
ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் ஒவ்வொரு வாரமும் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 03.35 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழன் சனி கிழமைகளில் இரவு 08.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்
நிறுத்தங்கள் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?
விஜயாவாடா (ஆந்திரா)
வாரங்கல் (தெலுங்கானா),
பல்ஹர்சா (மஹாராஷ்டிரா),
நாக்பூர் (மஹாராஷ்டிரா),
போபால் (மத்திய பிரதேசம்),
வீராங்கனை லெட்சுமி பாய் ஜான்சி
(உத்திர பிரதேசம்),
குவாலியர் (மத்திய பிரதேசம்),
ஆக்ரா (உத்திர பிரதேசம்),
துரந்தோ எக்ஸ்பிரஸ்
MGR சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் (Bi -Weekly)
துரந்தோ அதிவிரைவு தொடருந்து (Duronto Express) என்பது இந்தியாவில் இந்திய இரயில்வேயில் இயங்கும் வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் அதிவிரைவு குளிர்சாதன சொகுசு தொடருந்து ஆகும்
துரந்தோ எக்ஸ்பிரஸ் என்பது இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் நீண்ட தூர விரைவு இரயில்களின் வகையாகும் . தொடக்கத்தில் இந்த ரயில்களில் பயணிகள் நிற்கும் இடத்துக்கும் சேருமிடத்துக்கும் இடையில் நிறுத்தங்கள் இல்லை, ஆனால் ஜனவரி 2016 முதல் அந்த தொழில்நுட்ப நிறுத்தங்களில் இருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த ரயில்கள் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் வங்காள மொழியில் 'துரண்டோ' என்று பெயரிடப்பட்டது, அதாவது வங்காள மொழியில் 'வேகக்காரர்' , இது அக்காலத்தின் வேகமான ரயிலாக இருந்தது. துரந்தோ எக்ஸ்பிரஸ் சேவைகள் இந்தியாவின் பல பெருநகரங்கள் மற்றும் முக்கிய மாநிலத் தலைநகரங்களை இணைக்கின்றன .
வண்டி எண் 12269 சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன்
சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒவ்வொரு வாரமும்
திங்கள் வெள்ளி கிழமைகளில் காலையில் 6.35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய் , சனி கிழமைகளில் காலை 10.40 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.
வண்டி எண் 12270 ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல்
ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் சனி கிழமைகளில் மாலை 03.55 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு மறுநாள் புதன் ஞாயிறு கிழமைகளில் இரவு 08.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்
நிறுத்தங்கள் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?
விஜயாவாடா (ஆந்திரா)
பல்ஹர்சா (மஹாராஷ்டிரா),
நாக்பூர் (மஹாராஷ்டிரா),
ராணி கமலாபதி போபால் (மத்திய பிரதேசம்),
வீராங்கனை லெட்சுமி பாய் ஜான்சி
(உத்திர பிரதேசம்),
குவாலியர் (மத்திய பிரதேசம்),
கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
MGR சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் எக்ஸ்பிரஸ் (Weekly)
கரீப் ரத் என்ற சொல்லுக்கு ஏழையின் வண்டி என்று பொருள். குறைந்த செலவில் பயணிக்கத்தக்க தொடர்வண்டிகளை கரீப் ரத் என்ற பெயரில் இந்திய இரயில்வே இயக்குகிறது. இத்தகைய வண்டிகளில் கட்டணமும் குறைவு. பெட்டிகளில் அதிக இருக்கைகள் இருக்கும். இது ராஜ்தானி வகை வண்டிகளின் வேகத்தில் இயங்குகிறது.கரீப் ரத் (ஏழைகளின் தேர்) ரயில்கள் என்பது வழக்கமான ரயில்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட ரயில் பயணத்தை வழங்குவதற்காக இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் ஃபிரில்ஸ் இல்லாத ரயில்களின் தொடர் ஆகும்
வண்டி எண் 12611 சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன்
சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒவ்வொரு வாரமும்
சனி கிழமைகளில் காலையில் 6.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் ஞாயிறு கிழமைகளில் காலை 10.30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.
வண்டி எண் 12612 ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல்
ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கிழமைகளில் மாலை 03.35 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய் கிழமைகளில் இரவு 08.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்
நிறுத்தங்கள் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?
கூடூர் (ஆந்திரா)
ஓங்கோல் (ஆந்திரா)
விஜயாவாடா (ஆந்திரா)
பல்ஹர்சா (மஹாராஷ்டிரா),
நாக்பூர் (மஹாராஷ்டிரா),
போபால் (மத்திய பிரதேசம்),
வீராங்கனை லெட்சுமி பாய் ஜான்சி
(உத்திர பிரதேசம்),
குவாலியர் (மத்திய பிரதேசம்),
ஆக்ரா (உத்திர பிரதேசம்),
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.