கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையம்! இங்கு என்ன மாதிரியான மருத்துவம் பார்க்கப்படும் வாங்க பார்க்கலாம்.!!கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் கிராமமானது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும். எனவே இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசின் துணை சுகாதார நிலையம் கடந்த எட்டு மாதத்திற்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையமானது வாரத்தில் ஐந்து நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்தில் ஒரு கிராம சுகாதார செவிலியர் பணி செய்து வருகிறார்.

துணை சுகாதார நிலையத்தில் பார்க்கப்படும் மருத்துவங்கள்:
 • அவசர முதலுதவி சிகிச்சை
 • காய்ச்சல், சளி, இருமல்
 • அனைத்து நோய்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படும்
 • இலவச சர்க்கரை நோய் (சுகர்) பரிசோதனை
 • இலவச இரத்த அழுத்த (பிரஷர்) பரிசோதனை
 • கர்பிணி பெண்களுக்கான அவசர காலத்தில் ஆலோசனை வழங்குவது
 • இரத்த காயங்களுக்கு கட்டுக்கட்டி முதலுதவி சிகிச்சை
 • தொற்று நோய்கள் ஏற்படுவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது
 • சாதாரண நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது
 • பெரிய அளவிலான நோய்களுக்கு எங்கு சென்று மருத்துவம் செய்வது என்று வழிகாட்டுவது
 • 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்க்கே நேரடியாக வந்து மருத்துவம்
ஆகவே காய்ச்சல், சளி, இருமல், பொது மருத்துவம் மற்றும் ஆலோசனைகளுக்கு கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் அமைந்துள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோபாலப்பட்டிணம் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments