புதுக்கோட்டை ரயில் நிலையம் (குறியீடு:PDKT) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு ரயில் நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த ரயில் நிலையம் திருச்சிராப்பள்ளி - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். இந்த நிலையம் தமிழகத்தின், தென்மாவட்டங்களுக்கு மாற்று இரயில் பாதையாகவும் செயல்படுகிறது.
1886-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டையை தொடருந்து மூலம் திருச்சி மற்றும் பிற இடங்களுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, புதுக்கோட்டை சமஸ்தானம் ஒரு மன்னரால் ஆளப்பட்டதால், இவர்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட ரயில் பாதையின் செலவுத் தொகை பங்கீடு குறித்து நீடித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன.
பின்னர், ஒரு வழியாக 35 ஆண்டுகளுக்கு பிறகு 1921-ஆம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி- புதுக்கோட்டை- காரைக்குடி பாதையின் போக்குவரத்துக்கான செலவு கணக்கெடுப்பானது, தென்னிந்திய இரயில்வேயின் (எஸ்.ஐ.ஆர்) ராவ் சாஹிப் எஸ்.கிருஷ்ணமாச்சாரியால் எடுக்கப்பட்டது. இதில் இரயில் பாதை அமைப்பதற்கான செலவு மைலுக்கு, ரூ. 1.32 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.
ஒரு குறுகிய கால கட்டுமானத்திற்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை வழித்தடமானது ஏப்ரல் 17, 1929-ல் திறக்கப்பட்டது. மற்றும் ஜூலை 1, 1930 அன்று புதுக்கோட்டை - மானாமதுரை வழித்தடமானது திறக்கப்பட்டது.
இந்த ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் இதை எளிதில் அணுக முடியாது. இதை ஒரு வாடகையுந்து அல்லது ஆட்டோ ரிக்சா மூலம் அணுகலாம். பாதை மாற்றத்திற்கு முன், நிலையத்தில் 3 தடங்கள் மட்டுமே இருந்தன. இப்போது சரக்கு தொடருந்துகளை கையாள, கூடுதல் நான்காவது பாதை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தொடருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு கணிசமான அளவு இடமும் உள்ளது.
திருச்சிராப்பள்ளியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை செல்லும் அனைத்து ரயில்களும், சென்னை எழும்பூர் , திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சில ரயில்களும் மற்றும் செங்கோட்டைக்கு செல்லும் ஒரு ரயில் நிலையம் வழியாக செல்கின்றன.மேலும் வட மாநிலங்களில் இருந்து வாராந்திர ரயில்கள் புதுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் செல்கிறது. ஒரு சில ரயில்கள் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நிற்காமலும் செல்கிறது. மேலும் புதுக்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலும் செல்கிறது
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும், குறைந்தபட்சம் 1-2 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது.
பாம்பன் பாலம்
பாம்பன் பாலத்தில் போக்குவரத்து ரத்தின் காரணமாக புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்கள் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களோடு நிறுத்தப்பட்டுள்ளதால் எந்தெந்த ரயில்கள் மண்டபம் வரையிலும் & எந்தெந்த ரயில்கள் ராமநாதபுரம் வரையிலும் செல்கின்றன என்பதை புதுக்கோட்டை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த அட்டவணை PDKT Rail Users சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி பயன்பெறுவீர்*
நன்றி: Pdkt Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.