நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குறுக்கத்தியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார்.
புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்தோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் கைக்குழந்தையை வைத்திருந்த பெண்ணை முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்க, ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் உடனடியாக தனது காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து பரியுடன் நடந்தவற்றைக் கேட்டறிந்தார். மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக காவல்துறை வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.