ரயில் பயணக் காப்பீடு: வெறும் 35 பைசாவுக்கு ரூ.10 லட்சம் இன்ஷூரன்ஸ்!

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ஆப்பில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது, நீங்கள் பயணக் காப்பீடு எடுக்க விரும்புகிறீர்களா? - என்ற கேள்வி கேட்கப்படும். இந்த கேள்விக்கு `ஆம்' என்று மட்டும் க்ளிக் செய்தால் போதும். இந்த ஒரு க்ளிக் நமக்கு ரூ.10,00,000 வரை கவரேஜ் பெற்றுத் தரும்.
நேற்று முன்தினம்...நேரம் சுமார் 2.50... கோரமண்டல் எக்ஸ்பிரஸ்... இந்த ரயிலில் பயணத்தைத் தொடங்கிய எந்தப் பயணியும் அவர்களின் வாழ்க்கையை இந்தப் பயணம் மாற்றப்போகிறது என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இரவு 7 மணியளவில் இந்தக் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தரைபுரண்டு, தற்போது பலி எண்ணிக்கை 294-ஐ தொட்டுள்ளது.

இந்த விபத்து நிச்சயம் எதிர்பாராததுதான். ஆனால், இதில் உயிரிழந்தோரின் குடும்ப எதிர்காலமும், படுகாயம் அடைந்தோரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இழப்பு வேதனைக்குரியது. இத்தகைய சமயங்களில் நமக்கு பொருளாதார ரீதியில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க வழிமுறை உண்டு அதைப் பார்ப்போம்.

நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்களா? அந்த டிக்கெட்டை ஐ.ஆர்.சி.டி.சி ஆப்பில் எடுக்கிறீர்களா? அப்போது நீங்கள் எளிதாக 35 பைசாவில் ரூ.10 லட்சத்துகான பயணக் காப்பீட்டை எடுக்க முடியும்.

பயணக் காப்பீடு எடுப்பது எப்படி?
ஐ.ஆர்.சி.டி.சி ஆப், இணைய தளத்தில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது, நீங்கள் பயணக் காப்பீடு எடுக்க விரும்புகிறீர்களா? - என்ற கேள்வி கேட்கப்படும். இந்த கேள்விக்கு `ஆம்' என்று மட்டும் க்ளிக் செய்தால் போதும். இந்த ஒரு க்ளிக் நமக்கு ரூ.10 லட்சம் வரை பெற்றுத் தரும். ஆனால், இதற்கான பிரீமியம் தொகை வெறும் 35 பைசா மட்டுமே.

பயணக் காப்பீட்டை தேர்ந்தெடுத்தவுடன், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நமக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மெயிலில் நாமினி சம்பந்தமான லிங்க் வரும்.

இந்த லிங்குக்குள் சென்று நாமினி மற்றும் அதற்கான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த லிங்கில் கேட்கப்படும் பாலிசி நம்பர் ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் நம்முடைய டிக்கெட் புக்கிங் ஹிஸ்டரியில் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நாமினி பற்றிய தகவல்களை நாம் குறிப்பிடவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது, அசம்பாவிதம் நேரும்பட்சத்தில் காப்பீட்டு தொகை கோரப்பட்டால், அந்தத் தொகை நம்முடைய சட்டப்படியான வாரிசுக்குப் போய் சேரும்.

பயணக் காப்பீட்டின் விதிமுறைகள் என்ன?
இந்தப் பயணக் காப்பீட்டை இந்தியர்கள் மட்டுமே பெற முடியும்.

இந்த காப்பீட்டை ரயிலில் பயணிக்கும் அனைவரும் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பதில்லை.

ஒருவேளை நாம் இந்தக் காப்பீட்டை எடுக்கிறோம் என்றால், அந்தக் குறிப்பிட்ட பி.என்.ஆர் (PNR) எண்ணுக்கு கீழ் பயணிக்கும் அனைவரும் நிச்சயம் காப்பீட்டை எடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு பி.என்.ஆர் எண்ணுக்கு கீழ் நான்கு பேர் பயணிப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் இரண்டு பேருக்கு மட்டும் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியாது. கண்டிப்பாக நான்கு பேருக்கும் எடுக்க வேண்டும்.

ஒரு பி.என்.ஆர் எண்ணுக்கு கீழ் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பயணக் காப்பீட்டு பிரீமியம் தொகையாக 35 பைசா கட்ட வேண்டும்.

இந்தப் பயணக் காப்பீட்டை CNF/RAC/Part CNF டிக்கெட்டுகளுக்கு மட்டுமே எடுக்க முடியும்.

ரயில் விபத்து அல்லது ரயிலில் ஏற்படும் அசம்பாவிதத்துக்கு மட்டுமே இந்தப் பயணக் காப்பீட்டை பெற முடியும்.

இந்தப் பயணக் காப்பீடு 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கிடையாது.

எவ்வளவு தொகை கிடைக்கும்?
IRCTC தளத்தில் உள்ள தகவல்படி, ரயில் விபத்தினால் அல்லது ரயிலில் ஏற்படும் அசம்பாவிதத்தால்

ஒருவர் இறந்தால் ரூ.10 லட்சம்

நிரந்தரமாக முழுவதும் பாதிப்படைந்தால் (Permanent total Disability) ரூ.10 லட்சம்

நிரந்தர பாதி பாதிப்படைந்திருந்தால் (Permanent Partial Disability) ரூ.7. 5 லட்சம்

படுகாயம் அடைந்திருந்தால் மருத்துவமனை செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும், காப்பீடு செய்த பயணியின் பிணத்தை அவரின் சொந்த இடத்துக்கு எடுத்து செல்ல காப்பீட்டு நிறுவனம் ரூ.10,000 வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்காது?
பயணக் காப்பீடு எடுத்த பயணி, மேலே குறிப்பிட்டுள்ள பயன்களில் ஒன்றுக்கு மேற்பட்டதில் பயன்பெற முடியாது.

ரயில் பயணத்தின் போது தன்னை தானே காயம்படுத்திக் கொள்பவர், தற்கொலை செய்துகொள்பவர், தற்கொலைக்கு முயற்சிசெய்பவர், போதையில் பயணிப்பவர், எய்ட்ஸ் நோய்களுடன் பயணிப்பவர் ஆகியோருக்கு பயணக் காப்பீடு இருந்தாலும், அவர்களுக்கு பயணக் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.

குறிப்பிட்ட பயணத்துக்கு முன்பு அல்லது பின்பு ஏற்படும் விபத்துகளுக்கு இந்தக் காப்பீட்டு தொகை கிடைக்காது.

தேவையில்லாத சிகிச்சைகளுக்கு விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்பட மாட்டாது.

பிளாஸ்டிக் அல்லது காஸ்மட்டிக் சர்ஜரி, பல் சம்பந்தமான சிகிச்சை அல்லது சர்ஜரிகளுக்கு, மனநிலை சம்பந்தமான பாதிப்புகள், கர்ப்பக் கால பாதிப்புகள் போன்றவற்றுக்கு பயணக் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.

காப்பீட்டுத் தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள், காப்பீடு செய்த நபர் அல்லது அவரின் நாமினி அவர்களது இடதந்துக்கு அருகில் உள்ள காப்பீட்டு நிறுவனத்துக்குச் சென்று, காப்பீட்டுத் தொகையைக் கோரும் படிவத்தை நிரப்பித் தர வேண்டும்.

அத்துடம் காப்பீட்டு நிறுவனங்கள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீட்டுத் தொகை எப்போது கிடைக்கும்?

காப்பீட்டு நிறுவனத்தில் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த 15 நாள்களில் காப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments