அறந்தாங்கியில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
அறந்தாங்கியில்  மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்   ஆர்.காந்தி ஆய்வு செய்தார்

அறந்தாங்கி துறையரசபுரத்தில் ஜூன் 19 திங்கட்கிழமை  புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை  ஆர்.காந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது  மேலும் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற  3 தொழிலாளர்களுக்குஓய்வு பணிக்கொடை தொகை காசோலை வழங்கினார்.

இதில்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  திருமதி.ஐ.சா.மேர்சி ரம்யா IAS,  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, கைத்தறி மற்றும் கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறையின் முதன்மைச் செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., கைத்தறி ஆணையர் திரு விவேகானந்தன் இ.ஆ.ப., துணி நூல் ஆணையர்  முனைவர்.திரு. வள்ளலார், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments