துபாயில் ஹோப் சமூக பணிக்குழுவின் அறிமுக விழா


துபாயில் பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக ஹோப் என்ற சமூக பணிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அறிமுக விழா துபாய் அல் பர்சா தெற்கு 2 பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் முதன்மை விருந்தினராக அமீரக தொழிலதிபர் டாக்டர் பு அப்துல்லா கலந்து கொண்டார். அதேபோல் சிறப்பு விருந்தினர்களாக அயோத்தி திரைப்படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் பிக்பாஸ் புகழ் , சமூக ஆர்வலருமான ஆர்.விக்ரமன் ஆகியோர் பங்கேற்று புதிய குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹோப் சமூக பணிக்குழுவினரின் அறிமுக விழாவுடன் அமீரகத்தில் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஆர்வலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவை புரிந்து வருபவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமீரகத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஹோப் சமூக பணிக்குழுவின் நிறுவனர் கவுசர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments