மணமேல்குடியில் முதுகலை ஆசிரியர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த பயிற்சி !
மணமேல்குடி ஒன்றியத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி தொடங்கியது.

இப்பயிற்சியில் ஆசிரியர் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த தகவல்களை செயல்பாடுகள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தேசிய சுகாதார திட்டம் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மற்றும் தேசிய வளரிளம் பருவத்திற்கான நல்வாழ்வு திட்டம் குறித்த விரிவான கருத்துகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இப்ப பயிற்சியினை முதுகலை ஆசிரியர்கள் ஜேசுதாசன், பிரகாசம் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் செய்திருந்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments