அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கிளை சார்பாக 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்  முகமது மீரான் தலைமை வகித்தார். மாவட்ட துணைசெயலாளர் மீரான், கிளை தலைவர் அப்பாஸ், செயலாளர் சலீம், பொருளாளர் ஹாஜா, துணை தலைவர் காலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆண்கள், பெண்கள் ஆர்வமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இதில் 36 யூனிட்கள் இரத்தம் நன்கொடை கொடையாக வழங்கப்பட்டது.

இரத்தம் வழங்கியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை சார்பாக மரு.ராதாகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் சபியுல்லாஹ் இம்முகாமில் தன்னார்வமாக பங்களிப்பு செய்து இரத்தக் கொடை வழங்கியவர்களுக்கும், இணைந்து நடத்திய அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் மரு.ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவிற்கும், ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தகவல்: ரபீக்ராஜா, அறந்தாங்கி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments