ஆவுடையார் கோவில் சுப்பிரமணியபுரம் வழி: நாகுடி சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவிப்பு: பேச்சுவார்த்தையில் அரசு பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க முடிவு




ஆவுடையார்கோவிலில் இருந்து நாகுடி வழியாக சுப்பிரமணியபுரத்திற்கு அரசு பஸ் காலை, மாலை என இரு வேளையும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாணவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். மாலை நேரத்தில் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்று ஆவுடையார்ேகாவில் தாசில்தார் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் பலவரசன், கீழ்க்குடி, வாட்டாத்தூர், தொண்டைமானேந்தல் ஊராட்சி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதலாக பஸ்கள் விட அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், தற்சமயம் செல்லும் பஸ்சை பள்ளி மாணவர்களின் நலன்களுக்காக கூடுதலாக ஒரு முறை நாகுடியில் இருந்து தொண்டைமானேந்தல் வரை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பணிமனை மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments