தொண்டி கடலில் மரைன் போலிஸார் ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம்(மரைன்) எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து எஸ்.பி., தலைமையில் மரைன் போலீசார் ஆய்வு செய்தனர். தேவிபட்டினம், காரங்காடு, தொண்டி, எஸ்.பி.பட்டினம் ஆகிய கடலோரங்களில் நடந்த ஆய்வின் போது படகில் கடலுக்கு சென்று மீனவர்களை சந்தித்து அந்நியர்கள் நடமாட்டம் குறித்து விசாரித்தனர்.

கூடுதல் எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, போலீசார் உடன் சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments