புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை ஆகஸ்ட் 19 நடக்கிறது
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பம் பெறுதல், சரிபார்த்தல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்க பரிந்துரைகள் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதை தொடர்ந்து செப்டம்பர் 16-ந் தேதி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 23-ந் தேதி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. நாளை நடக்கும் முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (6), ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments