அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சாய்ந்த, பட்டுப்போன அலையாத்தி மரங்களை பராமரிக்க நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்




அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அலையாத்தி மரங்கள் உள்ளன. இவை சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவிலிருந்து கடற்கரையோரம் வாழும் மக்களை காப்பாற்றும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.

கடந்த சுனாமி தாக்கத்தின்போது நாகை உள்ளிட்ட பல்வேறு கடல்பகுதிகளில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் வசித்து வந்த மக்களில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் ஆடு, மாடுகளின் உயிர்களை பறித்தது. அதே வேளையில் திருவாரூர் மாவட்ட கடற்பகுதியான முத்துப்பேட்டை மற்றும் தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் எந்த பாதிப்பும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அலையாத்தி மரங்களை இறைவன் தங்களுக்கு அளித்த இயற்கை பாதுகாப்பு அரணாக எண்ணி போற்றி வருகின்றனர்.

கஜாபுயலின் போது நூற்றுக்கணக்கான அலையாத்தி மரங்கள் சாய்ந்தும், பட்டுபோயும் கிடக்கின்றன. மேலும் அலையாத்தி மரங்கள் மட்டுமல்லாமல் சமூக நலக்காடுகளில் உள்ள ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்து போய்விட்டன. இதனால் இப்பகுதியில் உள்ள வன ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் இது போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து கரையோரம் வசிக்கும் மக்களை காக்க வேண்டுமென்றால் அலையாத்தி மரங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments