எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர ரயிலாக இயங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் - தேதி விரைவில் அறிவிக்கப்படும் 


எர்ணாகுளம் -  வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர ரயிலாக இயங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது தேதி விரைவில் அறிவிக்கப்படும்

காரைக்குடி அறந்தாங்கி  பட்டுக்கோட்டை  திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக இயங்கி கொண்டிருக்கும் எர்ணாகுளம் –  வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் வாரம் இருமுறை இயக்கப்படுகிறது 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:16361) 

இந்த  எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை & திங்கட்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.  

வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (வண்டி எண் : 16312)

மறுமார்க்கத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை & புதன்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.  

வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் திருவாரூர் -  காரைக்குடி தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது நிரந்தர விரைவு ர‌யி‌ல் சேவையாகும்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட TIDIRUC உறுப்பினர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் அவர்கள் கூறுகையில் 

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் வண்டி எண் 16361/16362 என்ற ண்னுடன் நிரந்தர சேவையாக வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.  நிரந்தர சேவைகள் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை சேவையுடன் 

பாலக்காடு கோவை ஈரோடு சேலம் காட்பாடி சித்தூர் வழியாக கொல்லம் - திருப்பதி வாரமிருமுறை

பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ர‌யி‌ல் தூத்துக்குடி நீட்டிப்பு ஆகியவற்றிக்கும் 

மயிலாடுதுறை - திருச்சி & திருச்சி & கரூர் - கரூர் - சேலம் மூன்று ரயிலை மயிலாடுதுறை - திருச்சி ஒரே ரயிலாக இயங்கவும் 

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது 

இவ்வாறு அவர் கூறினார்

செய்தி சுருக்கம் :

* எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை புதிய ரயில்

* திருப்பதி - கொல்லம் வாரம் இருமுறை புதிய ரயில்

* பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி ரயில் தூத்துக்குடி நீட்டிப்பு 

* மயிலாடுதுறை - சேலம் புதிய ரயில் (MV- TPJ & TPJ - KRR & KRR- SA Merge)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments