இஸ்ரேல் இராணுவ அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறந்தாங்கியில் கண்டன ஆர்ப்பாட்டம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட தலைவர் குலாம் பாட்சா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சித்தீக் ரஹ்மான்,மாவட்ட துணை தலைவர் ரபீக் ராஜா,மாவட்ட துணை செயலாளர்கள் சேக்அப்துல்லா,புதுகை முகம்மது மீரான், ராஜேந்திரபுர மீரான்,மாவட்ட மருத்துவ அணி சபிபுல்லா,தொண்டரணி காஜாமைதீன், வணிகரணி இலியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 
கலந்து கொண்டு ஜியோனிஸ பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.
 
மாநில துணை செயலாளர் காரைக்கால் சகோதரர் யூசுப் பேசும்போது பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது, போராளிக்குழுக்களுடன் தங்கள் போரை 
நடத்தாமல் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதலை நடத்துகின்றனர், மக்கள் வாழும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் வான்வெளி 
குண்டுகள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, பள்ளிவாசல்கள் , பல்கலைக்கழகங்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளன

பாலஸ்தீனியர்கள் பச்சிளம் குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று விட்டார்கள் என்று பொய்செய்தியை பரப்பிய இஸ் ரேலிய ஆதரவு 
ஊடகங்கள் அவ்வாறு நடக்கவில்லை என்று இஸ்ரேல் சொன்ன பிறகும் அந்த செய்திகளை தொடர்ந்து பரப்புகின்றன, ஆனால் உண்மையில்
இஸ்ரேலின் குண்டு வீச்சால் பாலஸ்தீனத்தில் இதுவரை சுமார் 500 குழந்தைகள் இறந்துள்ளனர்.

பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர், மின்சாரம் ஆகியவை ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அரசால் தடுக்கப்பட்டுள்ளது, மருந்து 
பொருட்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன, எகிப்தின் வழியாக மக்களை வெளியேறலாம் என்று சொல்லி விட்டு அங்கும் இஸ்ரேல் குண்டு
வீசி தாக்குதலை நடத்தி வருகிறது, முழுமையாக பாலஸ்தீனியர்களை அழித்தொழிப்பதற்கான வேலையாக இது பார்க்கப்படுகிறது.

இது போன்ற போர் குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய ஐ நா சபை 
உள்ளிட்ட அமைப்புகள் ஊமைகளாகவும் குருடர்களாகவும் உள்ளனர். குறைந்தபட்ச நீதி கூட பாலஸ்தீனிய மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது , 
இஸ்ரேலின் இந்த அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம், இஸ்ரேலின் அராஜக போக்கிற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்தி பிரார்த்திக்கிறோம் என்று பேசினார் , இப்போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சிக்க வேண்டும் எனவும் ,அரபு நாடுகள் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

சுதந்திர பாலஸ்தீனம் அமைவதற்கான ராஜாங்க நடவடிக்கைகளை அரபு தேசங்கள் உள்ளிட்ட உலக நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும், 
இஸ்ரேல் மீது போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், தற்போதைய இஸ்ரேலிய அரசின் தலைமை இப்போர் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட 
வேண்டும் என்று பேசினார்.

எழுச்சியோடு கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ,முதியவர்களுக்கும் மாவட்ட செயலாளர்  முகம்மது மீரான் நன்றியுரைக்கு பிறகு அமைதியாக கலைந்து சென்றனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments