வேளாங்கண்ணி - கன்னியாகுமரி அரசு விரைவு பேருந்து இனி மல்லிப்பட்டினத்தில் நின்று செல்லும் - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தகவல்




வேளாங்கண்ணி - கன்னியாகுமரி அரசு விரைவு பேருந்து இனி மல்லிப்பட்டினத்தில் நின்று செல்லும் - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.

திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி - கன்னியாகுமரி பேருந்து இயக்கப்படுகிறது 

வேளாங்கண்ணி - கன்னியாகுமரி 

தினசரி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும் பேருந்து அடுத்து நாள் காலை 06.01 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் 

கன்னியாகுமரி - வேளாங்கண்ணி

தினசரி கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் பேருந்து அடுத்து நாள் காலை 04.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்

இந்த பேருந்துக்கு பட்டுக்கோட்டை அடுத்து இராமநாதபுரத்தில் தான் நிற்கும் இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் நின்று செல்ல கோரி மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் முகைதீன் அவர்கள் முதலமைச்சர் தனி பிரிவில் மனு அளித்து இருந்தார்கள் இதன் மூலம் மல்லிப்பட்டினத்தில் நிறுத்தம் கிடைத்தது உள்ளது..

விரைவில் வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் பேருந்தும் மல்லிப்பட்டினத்தில் நின்று செல்லும் 

இது குறித்து மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் முகைதீன் அவர்கள் கூறுகையில் 
 
வேளாங்கன்னியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு விரைவு பேருந்து மல்லிப்பட்டினம்
நின்று செல்லும் வண்ணம் நிறுத்தம் கிடைத்துள்ளது நமது ஊர் மற்றும் அருகில் உள்ள ஊர் மக்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்லாம் நமது ஊரில் பேருந்து நின்று செல்ல உதவி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜலில் முகைதீன் அவர்களுக்கு அனுப்பிய செய்தியில் 

SETC சிறந்த சேவையை பயணிகளுக்கு வழங்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

தடம் எண் 561E மற்றும் 771E ஆகிய தடங்களில் மல்லிப்பட்டினம் ஏறுமிடமாகவும் இறங்குமிடமாகவும் இணையதள முன்பதிவில் அறிவிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் மூன்று தினங்களில் இணையதளத்தில் ஏற்படுத்தித் தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

எனவே, தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை தெரிவிக்கப்படுகிறது



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments