கோபாலப்பட்டிணத்தில் மையத்தாங்கரை சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்
 கோபாலப்பட்டிணத்தில் மையத்தாங்கரை சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மையத்தாங்கரை சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.  அந்த கோரிக்கை நிறைவேற்றி தருவதாக சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்தார். 

அந்த  அடிப்படையில் 02.08.2023 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு 5 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி மையத்தாங்கரை சுற்றுசுவர் அமைக்க ராமச்சந்திரன்MLA அவர்கள் மற்றும்  ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்கள். 

அதன் அடிப்படையில் அந்த வேலைகள் தற்போது தொடங்கப்பட்டு  5 இலட்சம் மதிப்பீட்டில் 38 மீட்டர் நீளமாக வேலைகள் நடைப்பெற்று  வருகிறது. 

இதற்கு நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர்  ST. ராமச்சந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments