மீமிசல் பாப்புலர் பள்ளியில் “விபத்தில்லா தீபாவளி” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று 10/11/2023 வெள்ளிக்கிழமை மீமிசல், பாப்புலர் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில்  ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர்  தலைமையில், "விபத்தில்லா தீபாவளி" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி தினத்தன்று பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது பற்றியும், பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப் பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இதில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments