மணமேல்குடி அருகே சரக்கு வேன் மோதி பள்ளி மாணவி மரணம்




மணமேல்குடி அருகே சரக்கு வேன் ேமாதி பள்ளி மாணவி இறந்தார்.

சரக்கு வேன் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அம்மாபட்டிணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மகள் ஆசிபாபேகம் (வயது 9). இவர் அம்மாபட்டிணம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நைனா முகமது தனது உறவினருடன் அம்மாபட்டிணத்திலிருந்து செந்தலைப்பட்டிணம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்கு குடும்பத்துடன் ஆட்டோவில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஆட்டோவை அன்வர் ஓட்டினார். அம்மாபட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது, ஆட்டோவில் பெட்ரோல் நிரப்புவதற்காக டிரைவர் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் ஏற்றி வந்த சரக்கு வேன் ஆட்டோ மீது மோதியது.

மாணவி சாவு

இதில் ஆட்டோவில் ஓரத்தில் அமர்ந்திருந்த ஆசிபா சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆசிபாவை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஆசிபா இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments