ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு




ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் இணைந்து சம்பா பருவத்தில் விதைப்பு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களில் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து வயல்வெளியில் ஆய்வு செய்தனர். பூவலூர், வீளிமங்கலம் போன்ற பகுதிகளில் நெல் சம்பா விதைப்பு செய்துள்ள பயிர்களில் இலை சுருட்டு புழு மற்றும் ஆனை கொம்பான் காணப்பட்டது. இதையடுத்து, ஒரு ஏக்கருக்கு கார்போ சல்பான் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 மில்லி என்ற மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தேசிய பயிர் வகை ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி ரமேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி உள்பட பலர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments