பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முதன்முதலாக ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் எஸ்.ராமகிருஷ்ணன் அலுவலகத்தை தலைமை தாங்கி திறந்து வைத்தார். தஞ்சாவூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.சாந்தி, திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் எல்.உதயசந்திரன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பட்டுக்கோட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், உன்னிகிருஷ்ணன் பட்டுக்கோட்டை ரெயில் நிலைய அதிகாரி பார்த்திபன், ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திருவாரூர் ரெயில் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.முத்துலஸ் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments