குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டி மனு அளித்த கோபாலப்பட்டிணம் சமூக ஆர்வலர்கள்! மனு மீது நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்!!




குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டி கோபாலப்பட்டிணம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்திருந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மனுவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.


👨‍💻 GPM MEDIA 🦟 டெங்கு கொசுக்களின் பிறப்பிடமாக கோபாலப்பட்டிணம் சாலைகள் 🌏 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் 🛣️ குண்டும், குழியுமான‌ சாலையில் குளம்‌ போல் தேங்கி நிற்கும் மழை நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி செல்லும்‌ குழந்தைகள், பொதுமக்கள் அவதி! 🗣️ பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் துயர் துடைக்குமா மாவட்ட நிர்வாகம்!!! #Gopalappattinam #Gpm #Road #Water #GPM_Media

Posted by கோபாலப்பட்டிணம் மீடியா on Tuesday, November 28, 2023

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் ஆலமரம் ஈத்கா மைதானத்தில் இருந்து அரண்மனை தோப்பு வழியாக சுமார் 600 மீட்டர் தொலைவில் மீமிசல் செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறியதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குழந்தைகள், பெரியவர்கள், ஊற்று பகுதியில் இருந்து குடிதண்ணீர் எடுத்து வருபவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழை நேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.





சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் கிராவல் கொண்டு செப்பனிட வேண்டும் எனவும், மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28/11/2023 செவ்வாய்கிழமை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

அதனடிப்படையில் கோபாலப்பட்டிணம் சமூக ஆர்வலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவின் நடவடிக்கையாக நேற்று 10/12/2023 சிமெண்ட் ஜல்லியை JCB இயந்திரம் மூலம் குண்டும்,குழியுமான சாலைகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

புகார் மனு மீது தற்காலிகமாக துரித நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

குண்டும், குழியுமான சாலை குறித்து GPM மீடியாவில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments