அறந்தாங்கி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் பொதுமக்கள் பயன்பெற - அறந்தாங்கி நகராட்சி அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் காலை 10.00 முதல் 3.00 மணிவரை  நடைபெறவுள்ளது

மேற்காணும் முகாமில் எரிசக்தித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை/ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, வேலைவாய்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மாற்றுத் திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, உணவு மற்றும் நகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை தொழிலாளர் நலத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்,

எனவே மேற்காணும் மக்களுடன் முதல்வர் முகாமில் தாங்கள் பங்கேற்று தங்கள் வார்டு பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் வழங்கிடவும் தங்களது மேலான ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments