தொண்டி அழகப்பா பல்கலைக்கழக சுற்றுலாத்துறை வளாகத்தில் ரூ.25½ லட்சத்தில் உணவு அரங்கம் துணை வேந்தர் திறந்து வைத்தார்
தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுற்றுலாத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் ரூ.25.50 லட்சம் மதிப்பில் உணவு அரங்கம், பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் கடற்கரையில் அமர்ந்து படகு சவாரி மற்றும் கடலின் அழகை ரசிப்பதற்கும் ரூ.7 லட்சம் மதிப்பில் கடற்கரை ஓரத்தில் கூடாரமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய உணவு அரங்கம் மற்றும் கடற்கரை கூடாரத்தை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி திறந்து வைத்தார். தொடர்ந்து சுற்றுலாத்துறை வளாகத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து அவசர காலங்களுக்கு வெளியே செல்வதற்கு ஏதுவாக பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்படும், புதிதாக அறிவியல் ஆய்வுகள் கட்டிடம் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகானிடம் பல்கலைக்கழக வளாகத்திற்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், பல்கலைக்கழக உதவி நிர்வாக பொறியாளர் சீத்தாராமன், உதவி பொறியாளர் பாலமுருகன், தொண்டி அழகப்பா பல்கலைக்கழக வளாக சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஜின்னா, பேராசிரியர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments