மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் 41,763 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அதிகாரி ஆய்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் 41,763 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வாக்காளர் பட்டியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் 2024-க்கான ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முதல் கடந்த 9-ந் தேதி வரை பெறப்பட்டன.

இதில் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 26 ஆயிரத்து 758 விண்ணப்ப மனுக்களும், பெயர் நீக்கம் செய்வதற்காக 4 ஆயிரத்து 681 மனுக்களும், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக 10 ஆயிரத்து 324 மனுக்களும் என மொத்தம் 41 ஆயிரத்து 763 மனுக்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றும் பணி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான வெங்கடாசலம் நேற்று புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெறப்பட்ட படிவங்களை தணிக்கை செய்யும் பணியையும் அவர் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கலெக்டர் மெர்சி ரம்யா உடன் இருந்தார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷியாமளா, தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments