தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை 2 சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்  நகர  கிளை 2 மற்றும்  அரசு மருத்துவ கல்லூரி  இணைந்து  17/12/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை தவ்ஹீத் மர்க்கஸில்  இரத்ததான முகாம் நடைபெற்றது .

இந்த இரத்ததான முகாமிற்க்கு மாவட்ட துணை செயலாளர்  முகம்மது மீரான் தலைமை வகித்தார்.

இதில் கிளை தலைவர் பீர் முகம்மது,செயலாளர் ரகுமத்துல்லா,பொருளாளர் காதர்,  துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ரவுப், துணைச் செயலாளர் அன்வர்ஆகியோர் முன்னிலை  வகித்தனர் .

 இதில் இரத்த தான கொடையாளர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 22 யூனிட்  இரத்த தானம் வழங்கினர்.இதில்    இரத்தம் வழங்கிய அனைவருக்கும் இரத்த வங்கி மருத்துவர் S.சரவணன் MD அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

இறுதியாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments