திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாரந்திர சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு





திருநெல்வேலி - சென்னை எழும்பூர்  வாரந்திர சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
      
காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக இயங்கும்  திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாரந்திர சிறப்பு ரயில் 30-11-2023 முதல் 24-01-2024 வரை வாராந்திர சேவையாக இயக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06070  திருநெல்வேலி  -  சென்னை எழும்பூர் 

வண்டி எண் : 06070  திருநெல்வேலியில்  ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் மாலை 6-45 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் சென்னை எழும்பூர் சென்றடையும் 

வண்டி எண் : 06069
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ‌-

மறுமாா்கத்தில் 
வண்டி எண் : 06068

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி -  இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்  வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் 

சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??

திருநெல்வேலி சந்திப்பு,
கோவில்பட்டி,
சாத்தூர்,
விருதுநகர் சந்திப்பு ,
அருப்புக்கோட்டை ,
மானாமதுரை சந்திப்பு,
சிவகங்கை,
காரைக்குடி சந்திப்பு,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம்,
முத்துப்பேட்டை,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
மயிலாடுதுறை சந்திப்பு,
சீர்காழி,
சிதம்பரம்,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
மேல்மருவத்தூர் 
செங்கல்பட்டு சந்திப்பு,
தாம்பரம்,
சென்னை எழும்பூர் 

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

தாமதமாக புறப்படும்:

திருநெல்வேலியில் இருந்து இன்று 04.01.2023 மாலை 6-45 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில் இணை ரயில் வருகையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக 135 நிமிடங்கள் காலதாமதமாக இரவு 9-00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments