பனைக்குளம் அருகே ஆற்றங்கரை கடல் பகுதியில் புதிதாக உருவான மணல் திட்டு




பனைக்குளம் அருகே ஆற்றங்கரை பகுதியில் கடல் நீரோட்ட மாறுபாட்டால் புதிதாக மணல் திட்டு உருவானது.

புதிய மணல் திட்டு

பனைக்குளம் அருகே அமைந்துள்ளது ஆற்றங்கரை கடல் பகுதி. வைகை ஆற்று நீரும், கடல் நீரும் சேரும் முகத்துவார பகுதியே ஆற்றங்கரை கடற்கரை பகுதியாகும். இந்த ஆற்றங்கரை கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே ஏற்பட்டுள்ள கடல் நீரோட்ட வேகம் மற்றும் மாறுபாடு காரணமாக கடல் பகுதியில் மணல் திட்டு ஒன்று புதிதாக உருவாகி உள்ளது. பகல் நேரம் முழுவதும் இந்த பகுதியில் கடல் நீர் வற்றி மணல் பரப்பாகவே இருந்து மணல் திட்டாக காட்சியளித்து வருகின்றது.

இந்த மணல் திட்டு பகுதிகளில் கடல் காவா, கடல் குருவி, கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இரை தேடுவதற்காக வந்து குவிகின்றன.

வழக்கமானது

மேலும் மணல் திட்டுப் பகுதியை இரவு நேரங்களில் கடல் நீர் முழுவதுமாக சூழ்ந்து விடுகிறது. இது குறித்து இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறும் போது, ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்த பகுதிகளில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பகல் முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களில் கடல் நீர் வற்றி மணல் பரப்பாகவும், இரவு நேரங்களில் இதே பகுதி கடல் நீர் சூழ்ந்து காணப்படுவதும் வழக்கமான ஒன்றுதான் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments