கோபாலப்பட்டிணத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது
கோபாலப்பட்டிணத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம்  தொடங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1,000, முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வீடு, வீடாக வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.  ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்கள் இந்த டோக்கன் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

டோக்கன் எண்

இந்த டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், தெரு விவரம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது. இதில் டோக்கன் எண்ணை வரிசைப்படி எழுதியும், பரிசு தொகுப்பை வாங்க வர வேண்டிய தேதி மற்றும் நேரம் விவரத்தையும் அதில் ரேஷன் கடை ஊழியர்கள் எழுதி வினியோகித்தனர்.


இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் வந்து பரிசு தொகுப்பை வாங்கி செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். வருகிற 10-ந் தேதிக்குள் இந்த டோக்கன் வினியோகிக்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் 10-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments