ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து அதிகமான வாசகர்களை கொண்டு 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது GPM மீடியா வாட்ஸ்ஆப் குழுமம்!



ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து அதிகமான வாசகர்களை கொண்டு 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது GPM மீடியா வாட்ஸ்ஆப் குழுமம்.

GPM மீடியா வரலாறு:

GPM மீடியா இணையதளம்:

GPM மீடியா இணையதளம் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு இறுதி வரை www.gopalappattinam.blogspot.com என்ற இணையதள முகவரியில் இயங்கி வந்தது. பிறகு 28-02-2019 முதல் www.gopalappattinam.com என்ற இணையதள முகவரியில் செயல்பட்டு வருகிறது.

GPM மீடியாவின் சமூக வலைதளங்கள்:

GPM மீடியாவின் சமூக வலைதளங்கள், (Facebook, Whatsapp, Telegram, Instgram, Twitter, Youtube) ஆகிய ஆறு சமூக வலைதள பக்கங்களை கொண்டது. 

முகநூல் (Facebook):

கோபாலப்பட்டிணம் மீடியா (GPM Media) என்ற பெயரில் முகநூல் பக்கம் இயங்கி வருகிறது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது. இதில் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். 

வாட்ஸ்ஆப் (WhatsApp):

GPM மீடியா என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழுமம் இயங்கி வருகிறது. இது 2019 ஜனவரி 17 அன்று உருவாக்கப்பட்டது. இதில் எட்டு குழுமங்களில் இதுவரை சுமார் 2000க்கும் மேற்பட்ட வாசகர்கள் பயணித்து வருகின்றனர். 

GPM மீடியா வாட்ஸ்ஆப் எட்டு குழுமங்களாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. (GPM MEDIA-1, GPM MEDIA-2, GPM MEDIA-3, GPM MEDIA-4, GPM MEDIA PDK Dt-1, GPM MEDIA PDK Dt-2 ,GPM MEDIA PDK Dt-3 GPM MEDIA PDK Dt-4),

GPM MEDIA குழுமத்தின் நோக்கம்:

GPM MEDIA வாட்ஸ்ஆப் குழுமமானது ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில் (17 ஜனவரி) சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) நாம் துவங்கி செயல்பட்டு வருகிறோம்.

இங்கு நமது ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள் பற்றிய செய்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அன்றாட அடிப்படை பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட செய்திகள், மாவட்ட செய்திகள், அரசியல், வெளிநாடு, விளையாட்டு மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள், வஃபாத் செய்திகளை பதிவு செய்து வருகிறோம். 

உள்ளுர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் அடிப்படை தேவைகள் சம்மந்தமான செய்திகளை எங்களுக்கு புகைப்படத்துடன் அனுப்பினால் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக விரிவான செய்தியாக வெளியிடப்படும்.

நமது ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்வதற்கு முயன்று வருகிறோம். எனவே தன்னார்வத்துடன் செய்திகளை அனுப்ப விரும்புவோர் நமது சிறப்புச் செய்தியாளர்களாக பணியாற்றலாம். ஆர்வமுள்ளவர்கள் https://wa.me/918270282723 இந்த  வாட்ஸாப் எண்ணின்  மூலமாக தொடர்பு கொள்ளலாம். 

இந்த தளத்தில் நமது பகுதிகளில் நடக்கும் அனைத்து முக்கிய விவரங்களையும் வெளியிட முயன்று வருகிறோம். எனவே செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வாழ்த்துக்கள் மற்றும் அனுதாபங்கள் என அனைத்தையும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஏனெனில் நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் சிறு விஷயங்கள் பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.

இப்பொழுது உள்ள சூழலில் நாம் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறோம். ஆனால் அது சில மாதங்களிலே அழியக்கூடியதாக உள்ளது. எனவே அந்த பதிவுகளை பாதுகாக்கும் வண்ணம் அனைத்து நிகழ்வுகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து பார்க்கும் வண்ணம் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
 
நமது ஊர் மற்றும் சுற்று வட்டார மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. எனவே தங்களின் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.

Facebook Like:
 
Telegram Join:


Twitter Flow: 


Instagram Flow: 


Youtube Subscribe: 


Website Watch:


GPM மீடியாவை பொறுத்தவரையில் எந்த ஒரு செய்தியை பகிர்தாலும் நன்கு ஆராய்ந்து, அறிந்த பிறகுதான் அந்த செய்தியை வெளியிடுகிறோம். உள்ளூர் செய்திகள், சுற்றுவட்டார செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், வெளிநாட்டு செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள் என அனைத்து செய்திகளும் நமது GPM மீடியவில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
 
உள்ளூரில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளை வெளிநாடு மற்றும் வெளியூரில் வாழக்கூடிய நமதூர் சொந்தங்கள்  உள்ளூரில் இருந்து பார்ப்பதை போல சிறந்த முறையில் நேரலை செய்து வருகிறோம்.

நாங்கள் வெளியிடும் செய்திகளில் ஏதேனும் மாற்று கருத்துக்கள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கலாம். தங்களின் கருத்துகள் முழுமையாக வரவேற்கப்படுகின்றன.
 
ஆனால் அதே சமயத்தில் யார் மனமும் புண்படாத வண்ணம் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கவும். 

எங்களுக்கு ஐந்து வருட காலமாக ஆதரவு கொடுத்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களது GPM மீடியா -  TEAM சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வெளியிடும் செய்திகளை மக்களிடம் கொண்டுசெல்லும் விதமாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் செய்திகளை ஷேர் (Share) செய்து உங்களுடைய நல்ஆதரவை தந்து எங்களுடைய சேவை மக்களுக்கு பயனுள்ளதாக தொடர மனமார எங்களுக்காக துஆ செய்யுங்கள். 

GPM மீடியாவின் செயல்பாடுகளின் மீது விமர்சனங்கள் ஏதும் இருப்பின் எங்களுடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு எழுதியோ அல்லது குரல் பதிவாகவோ எங்களுக்கு தெரிவிக்கலாம்.

உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது..

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.!!

தொடர்பு கொள்ள மற்றும் உங்கள் செய்திகளை வெளியிட:



அன்புடன்:
GPM மீடியா டீம்,
கோபாலப்பட்டிணம் 
மீமிசல் - 614621
புதுக்கோட்டை-மாவட்டம்
தமிழ்நாடு.
இந்தியா.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments