முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆலங்காடு கிராம எல்லையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்தது. அன்றாடும் சேரும் குப்பைகளை முத்துப்பேட்டை எல்லை கோவிலூர் கிழக்கு கடற்க்கரை சாலையோரம் தனியார் இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. இதனால் கோவிலூர் ரவுண்டானா முதல் சாலையோரம் குப்பைகள் நிரம்பி கிடந்தன.
இந்நிலையில் அடிக்கடி யாரோ இந்த குப்பையில் வைத்து செல்கிற தீயால் கொழுந்து விட்டு எரிந்து பயங்கர தீயாக மாறி அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகையாக காணப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாதளவில் புகை சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். இதனால் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.
அடிக்கடி இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேரூராட்சிக்கு என நிரந்த குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை.
இதற்கிடையில் சென்ற வருடம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த தேவராஜன் என்பவர் தனிப்பட்ட முயற்சியில் மங்கலூர் தெற்குகாடுக்கு இடையே இருந்த அரசு புறம்போக்கு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க முயற்சி மேற்கொண்டு அனைத்து பணிகளும் நிறைவு செய்யும் நிலையில் அவர் இடம் மாற்றம் பெற்று சென்று விட்டார். இதனால் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மேலும் அந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செயப்பட்டது.
அதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கும் நிலையில் நேற்று முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இபுராஹீம் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்றி உள்ளே தள்ளும் பணியையும் நேரில் பார்வைட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.