‘‘இலக்கிய மன்ற போட்டிகளில் மாணவர்கள் வென்றால் வெளிநாடு சுற்றுலா பயணிக்கலாம்’’ முதன்மை கல்வி அதிகாரி தகவல்




இலக்கிய மன்ற போட்டிகளில் மாணவர்கள் வென்றால் வெளிநாடு சுற்றுலா பயணிக்கலாம் என முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா தெரிவித்தார்.

மாவட்ட அளவிலான போட்டி

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலக்கியமன்றம், வினாடி, வினா போட்டிகள் நேற்று நடைபெற்றது. போட்டியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த போட்டிகளை தொடர்ந்து சிறார் திரைப்படம், வானவில் மன்றம் ஆகிய போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. மேலும் முதலிடம் பெறும் மாணவர் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.

வெளிநாடு சுற்றுலா

மாநில அளவிலான போட்டிகள் வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் ்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் சிறந்த மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையால் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா பயணத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நடுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதுக்கோட்டை பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments