ஆவுடையார்கோவில் அருகே கூடலூர்லில் வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்




ஆவுடையார்கோவில் தாலுகா தாழனூர் ஊராட்சியில் உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 45), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கால்நடைகளுக்கு வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று காலை பலத்த காற்று வீசியது. அப்போது வைக்கோல் போர் மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வைக்கோல் போரில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சாம்பலானது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments