மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் SDPI கட்சி மற்றும் ஆண்டிக்காடு ஊராட்சி இணைந்து கருவேல மரங்கள் அகற்றம்.!




சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் விபத்துகள் ஏற்படும் வண்ணம் வளர்ந்து காணப்பட்டன. குறிப்பாக மல்லிப்பட்டினத்தில் இருந்து காயிதே மில்லத் நகர் எதிரே உள்ள சாலை வரை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். விபத்தை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மல்லிப்பட்டினம் நகர பொறுப்பாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். ஆண்டிக்காடு ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்றத்தலைவர் வரதராஜன் ஏற்பாட்டின் பேரிலும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த ஆண்டிக்காடு ஊராட்சி மன்றத்திற்கு காசீம் அப்பா தெரு, வடக்குத் தெரு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments