எஸ்.பி.பட்டினம்-உப்பூர் இடையே குண்டும்,குழியுமாக மாறிய கிழக்கு கடற்கரை சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?




திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் முதல் உப்பூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை சேதம் அடைந்து சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் இந்த சாலையில் தினமும் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்,பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கி காயம் அடைவது தொடர்கிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் காட்டு கருவேல மரங்களும், முட் செடிகளும் புதர்மண்டி காணப்படுவதாலும் சாலையின் எதிரே வரும் வாகனங்களை பார்க்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும் சாலையோரம் உள்ள முட்செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments