பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - இராமநாதபுரம் & சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் 22-08-2024 முதல் மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருவாரூர் - திருத்துறைபூன்டி - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த வண்டி எண் 06051/06052 தாம்பரம் - ராமநாதபுரம் வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் 22-08-2024 முதல் 14-09-2024 வரை வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7-00 மணிக்கும்
மறுமார்க்கத்தில் 23-08-2024 முதல் 15-09-2024 வரை வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3-00 மணிக்கும் புறப்படும்.
இந்த சிறப்பு விரைவு ரயில் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் பண்ருட்டி திருப்பாதிரிபுலியூர் கடலூர் சந்திப்பு சிதம்பரம் சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் மயிலாடுதுறை திருவாரூர் சந்திப்பு திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி கல்லல் சிவகங்கை மானாமதுரை பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும்.
வண்டி எண் 06069 /06070 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 22-08-2024, 29-08-2024, 05-09-2024 ஆகிய மூன்று வியாழக்கிழமைகளில் மாலை 6-45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும்
மறுமார்க்கத்தில் 23-08-2024, 30-08-2024, 06-09-2024 ஆகிய மூன்று வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் ரயில் முனையத்தில் இருந்து மாலை 3-00 மணிக்கும் புறப்படும்.
இந்த சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் சந்திப்பு சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் சந்திப்பு திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி கல்லல் சிவகங்கை மானாமதுரை அருப்புகோட்டை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும்.
திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சிறப்பு விரைவு ரயில் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெற்குரயில்வே மண்டலத்தின் சென்னை, திருச்சி மதுரை கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இருப்புபாதை பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் தன்மைக்கு ஏற்ப சிறப்பு விரைவு ரயில் சேவை நீட்டிப்பு குறித்து தெற்குரயில்வே தரப்பில் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடையுங்கள்.
News Credit : Alathambadi Venkatesan
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.