புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு தொடங்கியது.
27 விளையாட்டுக்கள்
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உட்பட ரூ.59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
பாிசு
இதனை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆகஸ்டு 5-ந் தேதி முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரு.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன்முறையாக 4-ம் இடம் பெற்றவருக்கும் 3-ம் பரிசிற்கு இணையாக பரிசு வழங்கிட உள்ளது.
இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
இணையதளம் வாயிலாக மட்டுமே
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 25-ந் தேதி ஆகும். எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். (குறிப்பு - இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
தாங்களாகவோ தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03498 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140 00777 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.