அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் விதமாக இனி விடுப்பு எடுத்தால் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் முறை
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 522 மாநில அரசு ஊழியர்கள் உள்ளனர். தமிழக அரசு ஊழியர்களின் ‘சர்வீஸ் பைல்்கள்" ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அரசு ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
அதற்காக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக ‘களஞ்சியம்’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தான் இனி விடுப்பு எடுப்பதற்கு தமிழக அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விடுப்பு-முன்பணம்
இது தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது மொபைலில் களஞ்சியம் செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் சுயவிவரம், விடுமுறை, சம்பள விவரம், பணி அறிக்கை ஆகியவற்றை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் இனி வரும் காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் இந்த களஞ்சியம் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முன்பணங்கள் சம்பந்தமாக அதாவது பண்டிகை முன்பணம், குறுகிய கால முன்பணம் போன்ற முன்பணம் விண்ணப்பங்கள் களஞ்சியம் செயலியின் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
அதில் ஏற்கனவே எடுத்த விடுப்புகளை நேவிகேஷன் பாத் பயன்படுத்தி பதிவிட்டு ஏற்பளிக்க வேண்டும். அப்போது தான் விடுப்பு விவரங்கள் முழுமையாக பதியப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிடுக்கிப்பிடி
இதுகுறித்து சில அதிகாரிகள் கூறியதாவது:-
செயலியில் தான் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது ஊழியர்களுக்கு ஒரு கிடுக்கிப்பிடி தான். செயலி மூலம் விடுப்புக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கும்போது, அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் இடத்தில் பணியில் இல்லாத ஊழியர்கள் விவரங்கள் செயலில் சரிபார்க்கப்படும். அவர் ஒருவேளை செயலியில் விடுப்புக்கு விண்ணப்பிக்காதபட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூட வாய்ப்பு உள்ளது. அதே போல் அரசு ஊழியர்கள் போராட்ட காலத்தில் விடுப்புக்கு விண்ணப்பித்தால் அதனை செயலி மூலமே அரசு நிராகரித்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.