தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கிளையின் சார்பாக, அறந்தாங்கி மாநகரில் 30.08.2024, வெள்ளிக்கிழமையன்று மது, போதை ஒழிப்பு பேரனி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை  மாவட்டம், அறந்தாங்கி கிளையின் சார்பாக, அறந்தாங்கி மாநகரில் 30.08.2024, வெள்ளிக்கிழமையன்று மது, போதை ஒழிப்பு பேரணியானது, அறந்தாங்கி தவ்ஹீத் மர்கஸிலிருந்து ஆரம்பித்து, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இந்த பேரணிக்கு, மாவட்டத் தலைவர் சகோ.H.சித்திக் ரகுமான்.,B.E., அவர்கள் தலைமை தாங்கி, இந்தப் பேரணியின் நோக்கத்தை எடுத்துரைத்து துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

இதில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், துணைத் தலைவர் முஹம்மது மீரா, துணைச் செயலாளர்கள் அறந்தாங்கி ஷேக் அப்துல்லாஹ், அப்துல் ரஹ்மான் ரஹுஃப், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா, மாவட்ட தொண்டர் அணிச் செயலாளர் முகமது  ஹாரிஸ், கிளைத் தலைவர் தாரிக் இப்ராஹிம், செயலாளர் முகமது சலீம் , பொருளாளர் முகமது இர்ஷாத், துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, துணைச் செயலாளர் முகமது ஹாலித் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்களும்,
பெண்களும், இளைஞர்களும், சிறுவர், சிறுமியரும் போதை பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக, கோஷங்கள் எழுப்பியும், கைகளில் பதாகைகளை ஏந்தியும், முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்தும், மேலும்  போதை பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்தும் பேரணியாக சென்றனர்.

இந்தப் பேரணியின் இறுதியில், TNTJ மாநிலப் பேச்சாளர், சகோ.பா.அப்துர் ரஹ்மான் அவர்கள், போதை பழக்கத்தால் இளைஞர்கள் அடையும் பாதிப்பு, பூரண மது ஒழிப்பின் அவசியம் குறித்தும், போதை பொருட்கள் அதிகம் நடமாடும் தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது, இப்பொறுப்பை உணர்ந்து தமிழக அரசு போதை பொருள் ஒழிப்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்கள்.

எழுச்சியோடு நடைபெற்ற இந்த பேரணி, அமைதியாக நிறைவுற்றது.

இப்படிக்கு,

H.சித்திக் ரகுமான்.,B.E.,
மாவட்டத் தலைவர், 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), 
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562682.

பத்திரிக்கை தொடர்புக்கு
சகோ.ரபீக் ராஜா,
மாவட்டப் பொருளாளர்.
8344562688.















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments