எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மீனவர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். நேற்று அதிகாலை இப்பகுதிகளில் இருந்து வழக்கம் போல கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர்.
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த மீனவர்கள் 9 பேரை கைது செய்து, படகுகளுடன் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
கைதானவர்களில் மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகு கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்குரியதும், மீனவர்கள் தினேஷ் (வயது 35), முரளி (32), செல்வம் (40), விஸ்வநாதன் (40) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மற்றொரு படகின் விவரம் தெரியவில்லை.
அதிர்ச்சி
இதற்கிடையே, புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்துஇங்குள்ள மீனவர்கள் சங்கத்தினருக்கும், மீனவ அதிகாரிகளுக்கும் தகவல் வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் இடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவத்தில் அங்குள்ள கோர்ட்டுகளில் தமிழக மீனவர்களுக்கு அபராதம் அதிக அளவு விதிக்கப்படுவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவத்தை தடுக்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.