முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 10-ந் தேதி தொடக்கம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 10-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதையொட்டி போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விளையாட்டு போட்டிக்காக பல்வேறு அரசுத்துறை வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பல்வேறு பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள், விளையாட்டு சங்க செயலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments