கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை கலெக்டர் அருணா தகவல்




புதுக்கோட்டை மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை பணி முகாம் தொடக்க நிகழ்ச்சி காந்தி பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் தூய்மை பணியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்பின் கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுக்கோட்டையை தூய்மையாக மாற்றுவதற்காக முதல்கட்டமாக மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர் பூங்காவில் கட்டணம் வசூல் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தவறான தகவல் அளித்த உதவி பொறியாளர் மீது மாநகராட்சி ஆணையர் துறைவாரியான நடவடிக்கை எடுத்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கழிப்பறை கட்டுவதற்காக பொதுப்பணித்துறையினர் நிதி ஒதுக்கியுள்ளனர்'' என்றார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments