மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் பாலம் அருகே உயிர் பலி வாங்கிய வேகத்தடை ஆவுடையார் கோவில் வட்டாட்சியரின் நடவடிக்கையால் வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டது






மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில்  பாலம் அருகே  உயிர் பலி வாங்கிய வேகத்தடை ஆவுடையார் கோவில் வட்டாட்சியரின் நடவடிக்கையால் வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் தாலுகா
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையின் மீமிசல் 16 கண் பாலத்தின் முன்பாக வேகத்தடை வண்ணமிடாததால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டன 

கடந்த சில நான்கு நாட்களுக்கு முன்னால் இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் உயிரிழந்தார் இந்த சூழ்நிலையின் தொடர்ச்சியாக உள்ளதால் இது குறித்து ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூர்து கிங் ஆவுடையார் கோவில் உதவி கோட்ட பொறியாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று 
 
நேற்று 18-09-2024 புதன்கிழமை வேகத்தடையில் வெள்ளை வண்ணம் இடப்பட்டது அதனால் இப்பகுதியில் வட்டாட்சியர் மார்ட்டின் லூர்து கிங் அவர்களுக்கு மீமிசல் சுற்றுவட்டார பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர் இந்த வேகத்தடையில் வெள்ளை வண்ணம் இருந்திருந்தால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றிருப்பார்கள் அதனால் தான் அடிக்கடி விபத்து நடந்ததாகவும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த வட்டாட்சியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments