ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி கோரி சமாதான கூட்டம்.





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே ஒக்கூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வப்போது பள்ளிக்கூடத்தில் உள்ள மடிக்கணினி உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போனது. இந்த நிலையில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கழிவறை வசதிகள் இல்லாமலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாமலும் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஒக்கூர் கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்

இநநிலையில் ஆவுடையார் கோவில் அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து நாளை 23-ந் தேதி இரவு, பகலாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments