நீர்நிலைகளில் எந்த கட்டிடிமும் கட்டக்கூடாது என அரசுத்துறை செயலாளர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், ஓடை கட்டிடத்தை இடித்து ரூ.14½ லட்சத்தை அதிகாரிகளிடம் வசூலிக்கவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக உத்தஞரவு பிறப்பித்தனர்.
ஓடையை ஆக்கிரமித்து கட்டிடம்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அருமைதாஸ், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகும் ஓடை, ஆவாரைக்குளம் பகுதியில் பழவூர் ஜேக்கப்–பு–ரம் கிராமத்திற்கு வருகிறது. இந்த ஓடையில் ஏரளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஞநீர்வரத்து தடுக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதீபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஓடையில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சேவை மையம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதற்காக ரூ.14 லட்சத்து 55 ஆயி–ரம் செலவிடப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்
கட்டுமான பணிக்கான இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பாக எந்தவித முறையான ஆய்வும் இன்றி, இந்த அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து உள்ளனர். நீர்நிலைகளில், எந்தவித கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதையும் கண்டுகொள்ளாதது போல இருக்கவும் முடியாது.
சேவை மைய கட்டிடத்துக்கு செலவு செய்யப்பட்ட ரூ.14 லட்சத்து 55 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து மாவட்ட கலெக்டர் வசூலிக்க வேண்டும்.
சுற்றறிக்கை
இனி வரும் காலங்களில் நீர்நிலைகளில் எந்தவித கட்டிடங்களும் கட்டக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர்கள் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நீர்நிலை மற்–றும் ஓடையை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வகையில் கட்டிடங்களை இடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.