கத்தார் தலைநகர் தோஹா - திருச்சி இடையே கூடுதல் விமானச் சேவை! ஒன்றிய அமைச்சருக்கு - கலாநிதி வீராசாமி எம்.பி. அவர்கள் கடிதம்!




கத்தார் தலைநகர் தோஹாவிற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையே கூடுதல் விமானச்சேவை வழங்கிட ஆவன செய்யும்படி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி எம்.பி. ஒன்றிய சிவில் விமானத்துறை அமைச்சர் கிஞ்சரப்பு இராம் மோகன் ரெட்டி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகம் நமது நாடு பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்நாட்டுப் பயணிகளுக்கும் விரும்பிப் பயணம் நாடாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது என்று தெரிவித்துள்ளது. இதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கூடி வருவதால் அதற்கு இணையாக விமானச் சேவையும் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. அங்குள்ள கட்டிடக்கலையின் வளர்ச்சி நிலவளம் சிறப்பான பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் முதலானவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளன. தற்போது தோஹாவிற்கும், திருச்சிராப்பள்ளிக்கும் வாரத்திற்கு ஒரு நேரடி விமானச் சேவை மட்டும் உள்ளது. அதாவது பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 10.00 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானம் ஒன்று மட்டும் இயங்கி வருகிறது. 

மற்றதினங்களில் பயணம் செய்யும் பயணிகள் பல்வேறு இணைப்பு விமானங் களைத் தேடி அலையும் நிலை உள்ளது.

மேலும் கத்தார் நாட்டிற்கு தென்னகத்தில் இருந்து குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் சென்று பணிபுரிந்து வருகின்றனர். இத்தகைய மக்கள் திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானச் சேவையைப் பெரிதும் விரும்புகின்றனர்.

இதனால் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப குறிப்பாக சுற்றுலாவிற்கு உகந்த காலங்களில் தற்போதுள்ள வாரத்திற்கு ஒரு விமானம் என்றுள்ள விமானப் பயண சேவை போதுமானதாக இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு தோஹா நகருக்கும் திருச்சிக்கும் இடையே மேலும் கூடுதல் பயணிகள் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் டாக்டர் கலாநிதி வீராசாமி குறிப்பிட்டுள்ளார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments