6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ்!




கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் சேவையானது ஐந்து ஆண்டை கடந்து  ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்களின் நலனுக்காக இயங்கி வரும் GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 19.10.2019 சனிக்கிழமை அன்று  MKR ராசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர் க.நவாஸ் கனி அவர்கள் அவசரகால ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடந்த 19.10.2019 முதல் 19.10.2024 இன்று வரை சுமார் 500-க்கும்  மேற்பட்ட நோயாளிகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு (சென்னை, பாண்டிச்சேரி, கோயமுத்தூர், சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு) ஏற்றி சென்று தனது உயிர்காக்கும் உன்னத சேவையை இந்த GPM மக்கள் மேடை அவசரகால ஊர்தி ஆம்புலன்ஸ் சேவை செய்துள்ளது.

இந்த GPM மக்கள் மேடையின் அவசரகால ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையானது மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சேவையை செய்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவையானது அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் GPM மக்கள் மேடை உறுப்பினர்களுக்கு 10 சதவிகிதம் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே,  அந்த நேரத்தில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தங்களது உன்னத சேவையை நிறுத்தாமல் இரவு, பகல் பாராது ஏராளமான மக்களின் உயிர்களை காத்தது குறிப்பிடத்தக்கது.  இக்கட்டான சூழ்நிலையிலும் தனது சேவையை இந்த GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் செய்து வருகின்றன. 

 மென்மேலும் உங்களுடைய பணிகளும், சேவைகளும் சுற்றுவட்டார மக்களுக்கு தொடர்ந்து செய்திட GPM மீடியா சார்பாக மனதார வாழ்த்துக்கிறோம்.





👨‍💻 🇬​PM ⓂEDIA 🚑 கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடையின் மாபெரும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சி 🗓 நாள்: 19.10.2019 சனிக்கிழமை 🏢 இடம்: MKR ராசி திருமண மஹால், கோபாலப்பட்டிணம் #Gopalappattinam | #GPM_Media | #GPM_Makkal_Medai | #Ambulance | #Ceremony #Function | #Live | #Telecast | #19Oct2019

Posted by கோபாலப்பட்டிணம் மீடியா on Saturday, October 19, 2019


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments