மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்




புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) திருமால் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, ரெயில் நிலையம் ரவுண்டானா, மாலையீடு திருமயம் சாலை, சிவபுரம் ஜெ.ஜெ. கல்லூரி வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்தது. இதில் 550-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த மாரத்ததான் ஓட்டத்தில் பள்ளி மாணவர்கள் பிரிவில் முதலிடம் தர்ஷன், 2-வது இடம் சரத், 3-வது இடம் நிவாஸ், மாணவிகள் பிரிவில் முதலிடம் வைஷ்ணவி, 2-வது இடம் தேவிபிரியா, 3-வது இடம் நித்திய ஸ்ரீ, கல்லூரி மாணவர்கள் பிரிவில் முதலிடம் சந்தோஷ், 2-வது இடம் லித்திக்குமரன், 3-வது இடம் அஜய், மாணவிகள் பிரிவில் முதலிடம் ஆர்த்தி, 2-வது இடம் சவுந்தர்யா, 3-வது இடம் கிருஷ்ணவேணி ஆகியோர் பெற்றனர்.

பரிசு

இதில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம், 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் 28 நபர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) திருமால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பரிசு தொகை மற்றும் சான்றிதழை வழங்கினர்.

இதில் புதுக்கோட்டை கோட்டக் கலால் அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட கலால் வருவாய் ஆய்வாளர்கள், பல்வேறு விளையாட்டு சங்க தலைவர், செயலாளர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள், பள்ளி, கல்வி துறை உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments