கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியதிட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments